Shanmugan Murugavel / 2021 மார்ச் 15 , பி.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொழில்முறை டென்னிஸ் வீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு ரஷ்யாவின் டனில் மெட்வெடெவ் இன்று முன்னேறியுள்ளார்.
அந்தவகையில், சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், ஸ்பெய்னின் ரஃபேல் நடால், சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், பிரித்தானியாவின் அன்டி மரே தவிர்ந்த ஏனைய ஒருவர் முதலிரண்டு இடங்களிலொன்றை 16 ஆண்டுகளில் பிடிப்பது இதுவே முதற்தடவையாகும்.
இறுதியாக, கடந்த 2005ஆம் ஆண்டு ஜூலையில், அவுஸ்திரேலியாவின் லெய்டன் ஹெவிட் இரண்டாமிடத்தில் காணப்பட்டிருந்தார்.
பிரான்ஸின் மர்ஸெய்யில் இடம்பெற்ற ஓபன் 13 தொடரை வென்றதன் மூலமே, இரண்டாமிடத்திலிருந்த நடாலை மூன்றாமிடத்துக்கு பின்தள்ளி, மூன்றாமிடத்திலிருந்து இரண்டாமிடத்துக்கு முன்னேறியிருந்தார்.
முதலாமிடத்தில் ஜோக்கோவிச்சும், நான்காமிடத்தில் ஒஸ்திரியாவின் டொமினிச் தியெமும், ஐந்தாமிடத்தில் கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் சிட்டிபாஸும் காணப்படுகின்றனர். ஆறாமிடத்தில் பெடரரும், ஏழாமிடத்தில் ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸவ்ரேவ்வும், எட்டாமிடத்தில் ரஷ்யாவின் அன்ட்ரே ருப்லெவ்வும் காணப்படுகின்றனர். ஒன்பதாமிடத்தில் ஆர்ஜென்டீனாவின் டியகோ ஸ்வார்ட்ஸ்மன்னும், பத்தாமிடத்தில் இத்தாலியின் மட்டியோ பெரெட்டினியும் காணப்படுகின்றனர்.
5 hours ago
8 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
26 Jan 2026