2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தென்னாபிரிக்கத் தொடரிலிருந்து ஓவன் விலகல்

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 14 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கெதிரான இறுதி இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியிலிருந்தும், ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரிலிருந்தும் அவுஸ்திரேலியாவின் மிற்செல் ஓவன் விலகியுள்ளார்.

ககிஸோ றபாடா வீசிய பந்தானது இரண்டாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் ஓவனின் தலைக்கவசத்தில் தாக்கியதால் ஏற்பட்ட அதிர்ச்சியாலேயே மேற்கூறப்பட்ட போட்டிகளிலிருந்து ஓவன் விலகியுள்ளார்.

களச் சோதனையின்போது ஓவன் தேறியிருந்தபோதும், ஆட்டமிழந்த பின்னர் தலைச்சுற்று சமிக்ஞைகளை ஓவன் காண்பித்ததாகக் கூறப்படுகின்றது.

இதேவேளை ஒருநாள் குழாமில் வேகப்பந்துவீச்சாளர் லான்ஸ் மொரிஸ், துடுப்பாட்டவீரர் மற் ஷோர்ட்டை சகலதுறைவீரர் ஆரோன் ஹார்டி, இடதுகை சுழற்பந்துவீச்சாளர் மற் கூனுமென் ஆகியோர் பிரதியிட்டுள்ளனர். ஷோர்ட்டுக்குப் பதிலாக ஹார்டி ஏற்கெனவே இருபதுக்கு – 20 குழாமில் காணப்படுகிறாரென்பது குறிப்பிடத்தக்கது.

மொரிஸ் முதுகுப் பகுதியில் வலி இருப்பதாக தெரிவித்ததுடன், ஷோர்ட் காயத்திலிருந்து இன்னும் குணமடையவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .