Mithuna / 2024 ஜனவரி 03 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அவ்வணியை 55 ஓட்டங்களுக்குள் இந்தியா சுருட்டியுள்ளது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் இந்தியா தோற்றிருந்த நிலையில், கேப் டெளணில் நேற்று ஆரம்பமான குறித்த போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணியின் தலைவர் டீன் எல்கர் தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
தென்னாபிரிக்கா சார்பாக கடந்த போட்டியில் காயமடைந்த அணித்தலைவர் தெம்பா பவுமாவை பிரதியிட்ட ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்டதுடன், காயமடைந்த ஜெரால் கொயட்ஸியை லுங்கி என்கிடி பிரதியிட்டதுடன், கீகன் பீற்றர்சனை கேஷவ் மஹராஜ் பிரதியிட்டிருந்தார். இந்தியா சார்பாக இரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூரை இரவீந்திர ஜடேஜா, முகேஷ் குமார் பிரதியிட்டனர்.
இந்நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய தென்னாபிரிக்கா, மொஹமட் சிராஜ் (6), ஜஸ்பிரிட் பும்ரா (2), முகேஷ் குமாரிடம் (2) வரிசையாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 55 ஓட்டங்களையே பெற்றது.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025