Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2022 செப்டெம்பர் 29 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்தியா வென்றது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், திருவனந்தபுரத்தில் நேற்றிரவு நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் றோஹித் ஷர்மா, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, தீபக் சஹர் (2), அர்ஷ்டீப் சிங்கிடம் (3) ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தடுமாறியது.
பின்னர் ஏய்டன் மார்க்ரம் 25 (24), வெய்ன் பார்னல் 24 (37), கேஷவ் மஹராஜ் 41 (35) ஓட்டங்களைப் பெற்றபோதும் ஹர்ஷால் பட்டேல் (2), அக்ஸர் பட்டேலிடம் இவர்கள் வீழ்ந்ததோடு, இரவிச்சந்திரன் அஷ்வின் தனது நான்கு ஓவர்களில் எட்டு ஓட்டங்களை மாத்திரமே விட்டுக் கொடுத்த நிலையில் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 106 ஓட்டங்களை தென்னாபிரிக்கா பெற்றது.
பதிலுக்கு 107 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்தியா ஆரம்பத்திலேயே ஷர்மா, விராட் கோலியை ககிஸோ றபாடா, அன்றிச் நொர்கியாவிடம் இழந்தபோதும், சூரியகுமார் யாதவ்வின் ஆட்டமிழக்காத 50 (33), லோகேஷ் ராகுலின் ஆட்டமிழக்காத 51 (56) ஓட்டங்களோடு 16.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில், றபாடா 4-1-16-1, வெய்ன் பார்னர் 4-0-14-0, கேஷவ் மஹராஜ் 3-0-21-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
இப்போட்டியின் நாயகனாக அர்ஷ்டீப் சிங் தெரிவானார்.
இரண்டு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது போட்டியானது கெளகாத்தியில் நாளை மறுதினம் 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .