2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

தென்னாபிரிக்காவை வென்று அரையிறுதியில் பாகிஸ்தான்

Editorial   / 2018 ஜனவரி 24 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நியூசிலாந்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதிபெற்றுள்ளது.

கிறைஸ்ட்சேர்ச்சில் இன்று இடம்பெற்ற தமது காலிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்காவை 3 விக்கெட்டுகளால் வென்றே அரையிறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதிபெற்றுள்ளது.

இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய தென்னாபிரிக்கா, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், வன்டிலே மக்வெடு 60 (65), ஜேஸன் நிமன்ட் 36 (64) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், முஹமட் மூஸா 3, ஷகீன் அப்ரிடி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 190 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், 47.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. துடுப்பாட்டத்தில், அலி ஸர்யப் ஆட்டமிழக்காமல் 74 (111), சாட் கான் 26 (62) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஜேஸன் நிமன்ட் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இப்போட்டியின் நாயகனாக அலி ஸர்யப் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .