2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தென்னாபிரிக்காவை வென்ற பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 10 , பி.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென்னாபிரிக்காவுக்கெதிரான முதலாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் பாகிஸ்தான் வென்றது.  

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் இன்று நடைபெற்ற குறித்த போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்காவின் அணித்தலைவர் ஹென்றிச் கிளாசென், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

தென்னாபிரிக்கா சார்பாக வேகப்பந்துவீச்சாளர்கள் லிஸார்ட் வில்லியம்ஸ், சிஸன்டா மகலா, துடுப்பாட்டவீரர் விஹான் லுப்பெ ஆகியோர் அறிமுகத்தை மேற்கொண்டனர்.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய பாகிஸ்தான், ஜனமென் மலனின் 24 (16) ஓட்டங்களுடன் வேகமான ஆரம்பத்தைப் பெற்றபோதும், மலனையும், அடுத்து வந்த லுப்பெயையும் மொஹமட் நவாஸ், ஹஸன் அலியிடம் இழந்திருந்தது.

பின்னர், ஏய்டன் மர்க்ரமின் 51 (32), கிளாசெனின் 50 (28) ஓட்டங்கள் மூலம் தமது இனிங்ஸை வேகமாக நகர்த்தியிருந்த தென்னாபிரிக்கா, இருவரையும் முறையே மொஹமட் நவாஸ், ஹஸன் அலியிடம் இழந்திருந்தது. தொடர்ந்து பிற்றே வான் பிஜோனின் 34 (24) ஓட்டங்களுடன் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு, 189 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், தப்ரையாஸ் ஷம்சி (2), பெயுரன் ஹென்ட்றிக்ஸிடம் (30 குறிப்பிட்ட இடைவெளிகளில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தபோதும், மொஹமட் றிஸ்வானின் ஆட்டமிழக்காத 74 (50), பாஹீம் அஷ்ரப்பின் 30 (14), பக்கர் ஸமனின் 27 (19) ஓட்டங்களோடு, 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக மொஹமட் றிஸ்வான் தெரிவானார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .