Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 02 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்காவுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் அவ்வணியை இங்கிலாந்து வெள்ளையடித்தது.
இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வென்றிருந்த இங்கிலாந்து, கேப் டெளணில் நேற்றிரவு நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே 3-0 என தென்னாபிரிக்காவை இங்கிலாந்து வெள்ளையடித்தது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா தெம்பா பவுமாவின் 32 (26), அணித்தலைவர் குயின்டன் டி கொக்கின் 17 (12) ஓட்டங்கள் மூலம் விரைவான ஆரம்பத்தைப் பெற்றபோதும் இவர்கள் இருவரையும் அடுத்து வந்த றீஸா ஹென்ட்றிக்ஸையும் கிறிஸ் ஜோர்டான், பென் ஸ்டோக்ஸிடம் இழந்து தடுமாறியது.
எனினும், ரஸி வான் டர் டுஸனின் ஆட்டமிழக்காத 74 (32), பப் டு பிளெஸியின் ஆட்டமிழக்காத 52 (37) ஓட்டங்களுடன் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 191 ஓட்டங்களை தென்னாபிரிக்கா பெற்றிருந்தது. அடில் ரஷீட் 4 ஓவர்களில் 20 ஓட்டங்களையே விட்டுக் கொடுத்திருந்தார்.
பதிலுக்கு, 192 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, டேவிட் மலனின் ஆட்டமிழக்காத 99 (47), ஜொஸ் பட்லரின் ஆட்டமிழக்காத 67 (46) ஓட்டங்களுடன் 17.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கையடைந்தது. ஜோர்ஜ் லின்டி 4 ஓவர்களில் 26 ஓட்டங்களையே வழங்கியிருந்தார்.
இப்போட்டியின் நாயகன், தொடரின் நாயகனாக டேவிட் மலன் தெரிவானார்.
18 minute ago
31 minute ago
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
31 minute ago
42 minute ago
2 hours ago