Shanmugan Murugavel / 2024 ஜூன் 29 , பி.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

9-வது டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் தலைவர் ரோகித் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் - விராட் கோலி களமிறங்கினர்.
இதில் முதல் ஓவரிலேயே 15 ஓட்டங்கள் அடித்து அதிரடியாக தொடங்கிய இந்தியாவுக்கு, 2-வது ஓவரை வீசிய கேஷவ் மகராஜா இரட்டை செக் வைத்தார். அந்த ஓவரில் ரோகித் 9 ஓட்டங்களிலும், பண்ட் டக் அவுட் ஆகியும் ஏமாற்றம் அளித்தனர்.
அவரைதொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 3 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தார் பின்னர் கை கோர்த்த விராட் கோலி - அக்சர் படேல் இணை சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தது. விராட் கோலி ஒருபுறம் நிதானமாக விளையாட மறுமுனையில் அக்சர் அதிரடியாக விளையாடினார். அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அக்சர் படேர் துரதிர்ஷ்டவசமாக 47 ஓட்டங்களில் ரன் அவுட் ஆனார். நிலைத்து விளையாடிய விராட் கோலி அரைசதம் அடித்து அசத்தினார்.
ஷிவம் துபே தனது பங்குக்கு 27 ஓட்டங்கள் அடித்தார் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ஓட்டங்கள் அடித்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 76 ஓட்டங்கள் குவித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக நோர்ஜே மற்றும் கேஷவ் மகராஜா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 177 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஹெண்ட்ரிக்ஸ் 4 ஓட்டங்களில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் கேப்டன் மார்க்ரனும் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார் தொடக்கத்திலேயே முக்கிய இரு விக்கெட்டுகளை இழந்த நிலையில், டி காக்குடன் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்தார். ஸ்டப்ஸ் தன் பங்குக்கு 31 ஓட்டங்களும், டி காக் 39 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த கிளாசன் அதிரடியில் மிரட்டினார். குறிப்பாக அக்சர் படேல் வீசிய 15-வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி உட்பட மொத்தம் 24 ஓட்டங்களை திரட்டினார். இந்த ஓவர் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து அதிரடி காட்டிய கிளாசன் 23 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 52 ஓட்டங்களில் ஆட்டமிழந்தாலும், தனது வேலையை கச்சிதமாக செய்து முடித்தார்.
ஒரு கட்டத்தில் 30 பந்துகளில் 30 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு சாதகமாகவே ஆட்டம் இருந்தது 19-வது ஓவரை வீச வந்த அர்ஸ்தீப் சிங், வெறும் 4 ஓட்டங்களை மட்டும் கொடுத்து இந்திய அணிக்கு நம்பிக்கையூட்டினார். இதனால் கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 16 ஓட்டங்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
கடைசி ஓவரை ஹர்தி பாண்ட்யா வீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட டேவிட் மில்லர், சிக்சருக்கு தூக்கி அடிக்க முயன்றார். அப்போது எல்லைக்கோடு அருகே நின்ற சூர்யகுமார் யாதவ், அபாரமாக பந்தை பிடித்து அசத்தினார். இதனால் அதிரடி ஆட்டக்காரரான மில்லர் அவுட்டானார் மில்லர் ஆட்டமிழந்ததும், இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை பிறந்தது.
அடுத்த 5 பந்துகளில் தென் ஆப்பிரிக்க அணியால் 8 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று 2-வது முறையாக டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது
7 minute ago
13 minute ago
24 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
13 minute ago
24 minute ago
25 minute ago