Shanmugan Murugavel / 2020 நவம்பர் 18 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் தேசங்களுக்கான லீக் தொடரில், ஸ்பெய்னில் இன்று அதிகாலை நடைபெற்ற ஸ்பெய்ன், ஜேர்மனிக்கிடையேயான குழு டி போட்டியொன்றில் 6-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெய்ன் வென்றது.
ஸ்பெய்ன் சார்பாக பெரன் டொரஸ் மூன்று கோல்களையும், அல்வரோ மொராட்டா, றொட்றி, மிகேல் ஒயர்ஸ்பல் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இப்போட்டியில் வென்றதன் மூலம் குழுவில் முதலிடம் பெற்று இத்தொடரின் இறுதிப் போட்டிகளுக்கு ஸ்பெய்ன் தகுதிபெற்றுள்ளது.
இதேவேளை, குரோஷியாவில் நடைபெற்ற குரோஷியா, நடப்புச் சம்பியன்கள் போர்த்துக்கல்லுக்கிடையிலான குழு சி போட்டியொன்றில் 3-2 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் வென்றது. போர்த்துக்கல் சார்பாக, ருபென் டயஸ் இரண்டு கோல்களையும், ஜோவா பீலிக்ஸ் ஒரு கோலையும் பெற்றனர்.
35 minute ago
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
55 minute ago
2 hours ago