Shanmugan Murugavel / 2025 ஜூலை 07 , பி.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது பல்லேகலவில் நாளை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை இலங்கையும், இரண்டாவது போட்டியை பங்களாதேஷும் வென்ற நிலையில் தொடரைத் தீர்மானிக்கும் போட்டியாக இப்போட்டி அமையவுள்ளது.
இலங்கையணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர்கள் நிஷான் மதுஷ்க, பதும் நிஸங்க முதலிரண்டு போட்டிகளில் சோபிக்காத நிலையில அவர்களிடமிருந்து சிறப்பான பெறுபேறுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. குறிப்பாக குழாமில் அவிஷ்க பெர்ணாண்டோ உள்ள நிலையில் நிஷான் மதுஷ்க பிரகாசிக்க வேண்டிய கட்டாயத்தை எதிர்கொள்கிறார். தவிர கமிந்து மென்டிஸிடமிருந்தும் தாக்கம் செலுத்தக் கூடிய இனிங்ஸ் எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபக்கமாக பங்களாதேஷில் நஜ்முல் ஹொஸைன் ஷன்டோவை மொஹமட் நைம் பிரதியிடக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுவதோடு, அணித்தலைவர் மெஹிடி ஹஸன் மிராஸிடமிருந்தும் மேம்பட்ட துடுப்பாட்டப் பெறுபேறு எதிர்பார்க்கப்படும். இப்போட்டிக்கான அணியில் ஹஸன் மஹ்மூட்டை தஸ்கின் அஹ்மட் பிரதியிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
12 minute ago
44 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
44 minute ago
56 minute ago