2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

தொடரைக் கைப்பற்றிய நியூசிலாந்து

Shanmugan Murugavel   / 2025 நவம்பர் 19 , பி.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்ற நியூசிலாந்து, நேப்பியரில் புதன்கிழமை (19) நடைபெற்ற இரண்டாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே இன்னுமொரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றியது.

மழை காரணமாக 34 ஓவர்கள் கொண்டதாக நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்தின் அணித்தலைவர் மிற்செல் சான்ட்னெர், மேற்கிந்தியத் தீவுகளை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், அணித்தலைவர் ஷாய் ஹோப்பின் ஆட்டமிழக்காத 109 (69), றொமாரியோ ஷெப்பர்ட்டின் 22 (14), ஜஸ்டின் கிறேவ்ஸின் 22 (27), அகீம் அகஸ்டேயின் 22 (31), மத்தியூ போர்டேயின் 21 (11) ஓட்டங்களோடு 34 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 247 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் நாதன் ஸ்மித் 4, கைல் ஜேமிஸன் 3, சான்ட்னெர் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு 248 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, டெவொன் கொன்வேயின் 90 (84), றஷின் றவீந்திரவின் 56 (46), டொம் லேதமின் ஆட்டமிழக்காத 39 (29), சான்ட்னெரின் ஆட்டமிழக்காத 34 (15) ஓட்டங்கலோடு 33.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில் றொஸ்டன் சேஸ், போர்டே ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக ஹோப் தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X