2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

தொடரைக் கைப்பற்றிய பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 04 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை பாகிஸ்தானும், இரண்டாவது போட்டியை மேற்கிந்தியத் தீவுகளும் வென்றிருந்த நிலையில், ஐக்கிய அமெரிக்காவில் திங்கட்கிழமை (04) நடைபெற்ற மூன்றாவது போட்டியில் வென்றதன் மூலமே 2-1 என்ற ரீதியில் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தானின் அணித்தலைவர் சல்மான் அக்ஹா, தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், சஹிப்ஸடா பர்ஹானின் 74 (53), சைம் அயூப்பின் 66 (49), ஹஸன் நவாஸின் 15 (07), குஷ்டில் ஷாவின் ஆட்டமிழக்காத 11 (06), பஹீம் அஷ்ரப்பின் ஆட்டமிழக்காத 10 (03) ஓட்டங்களுடன் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் றொஸ்டன் சேஸ் 4-0-31-1, ஜேஸன் ஹோல்டர் 4-0-34-1, அகீல் ஹொஸைன் 4-0-32-0, குடகேஷ் மோட்டி 2-0-14-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

பதிலுக்கு 190 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், அலிக் அதனஸேயின் 60 (40), ஷெர்ஃபேன் ருதஃபோர்ட்டின் 51 (35), ஜுவெல் அன்ட்றூவின் 24 (15), சேஸின் 15 (10), மோட்டியின் ஆட்டமிழக்காத 10 (04) ஓட்டங்களுடன் போராடியபோதும் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களையே பெற்று 13 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பந்துவீச்சில் சுஃபியான் முக்கீம் 4-0-20-1, ஹரிஸ் றாஃப் 4-0-24-1, சைம் அயூப் 4-0-38-1, பஹீம் அஷ்ரப் 2-0-13-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

இப்போட்டியின் நாயகனாக பர்ஹானும், தொடரின் நாயகனாக மொஹமட் நவாஸும் தெரிவாகினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .