2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தொடரைச் சமப்படுத்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு 309 ஓட்டங்கள் தேவை

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 21 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரைச் சமப்படுத்துவதற்கு 309 ஓட்டங்களை மேற்கிந்தியத் தீவுகள் பெற வேண்டியுள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றுள்ள நிலையிலேயே, சென். லூசியாவில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த இரண்டாவது டெஸ்டை வெல்வதற்கே 309 ஓட்டங்களை மேற்கிந்தியத் தீவுகள் இன்னும் பெற வேண்டியுள்ளது.

தமது இரண்டாவது இனிங்ஸை நேற்றைய மூன்றாம் நாளில் ஆரம்பித்த தென்னாபிரிக்கா, கேமார் றோச், கைல் மேயர்ஸ், ஜேஸன் ஹோல்டர், ஜேடன் சியல்ஸிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, 73 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

எனினும், ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் தனித்துப் போராடிய றஸி வான் டர் டுஸனின் ஆட்டமிழக்காத 75, ககிஸோ றபாடாவின் 40 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்து தமது இரண்டாவது இனிங்ஸில் 174 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் றோச் 4, மேயர்ஸ் 3, ஹோல்டர், சியல்ஸ், கிறேய்க் பிறத்வெய்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தனர்.

இந்நிலையில், 324 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது முதலாவது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வருகின்ற மேற்கிந்தியத் தீவுகள், நேற்றைய மூன்றாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 15 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. களத்தில், கிரண் பவல் ஒன்பது, பிறத்வெய்ட் ஐந்து ஓட்டங்களுடனுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .