Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் சீரி ஏ தொடரின் சம்பியன்களாக, தொடர்ச்சியாக ஐந்தாவது பருவகாலமாக ஜுவென்டஸ் முடிசூடிக்கொண்டது.
பியோரென்டினாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை (24), 2-1 என்ற கோல்கணக்கில் வென்றபோதே சம்பியன் பட்டத்துக்கு அருகில் வந்த ஜுவென்டஸ், கடந்த திங்கட்கிழமை (25) இடம்பெற்ற போட்டியில், றோமாவுடன் நாபோலி 1-0 என்ற கோல்கணக்கில் தோல்வியடைந்த நிலையில் சீரி ஏ பட்டத்தை ஜுவென்டஸ் கைப்பற்றியது.
கடந்தாண்டு ஒக்டோபர் 28ஆம் திகதி, முதலிடத்தில் இருந்த அணியை விட 11 புள்ளிகள் பின்தங்கி சீரி ஏ புள்ளிகள் தரவரிசையில் 12ஆவது இடத்தில் இருந்த ஜுவென்டஸ், அதன் பின் எழுச்சி கொண்டு, அதன் பின்னர் தான் விளையாடிய 25 போட்டிகளில் 24இல் வென்றிருந்ததுடன் மற்றையதை சமநிலையில் முடித்துக் கொண்டது.
இந்தப் பருவகாலத்துடன் சேர்த்து, இதுவரையில் ஏழு சீரி ஏ பட்டங்களை ஜுவென்டஸ் அணியின் தலைவரான 38 வயதான ஜையுலுஜி புபான் வென்றுள்ளார். இவை தவிர, 2005, 2006ஆம் ஆண்டுகளில் ஆட்ட நிர்ணய சதி காரணமாக இரண்டு சீரி ஏ பட்டங்கள் பறிக்கப்பட்டிருந்தன.
35 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
59 minute ago