Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 28 , பி.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, முதற்தடவையாக டெஸ்ட் அந்தஸ்துள்ள நாடொன்றை இரு தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் வென்ற முதலாவது துணை அங்கத்துவது நாடு என்ற சாதனையை ஏற்படுத்திய பங்களாதேஷ் அணி, சிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது இருபது-20 போட்டியை வென்றதனூடு முதற்தடவையாக சர்வதேச இருபது-20 போட்டித் தொடரையும் வென்றுள்ளது.
புலவாயோவில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 190 ஓட்டங்களை குவித்தது. அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் சீன் வில்லியம்ஸ் 26 பந்துகளில் 8 நான்கு ஓட்டங்கள், 2 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 54 ஓட்டங்களையும், ரிச்மொண்ட் முத்தும்பாமி 33 பந்துகளில் ஒரு நான்கு ஓட்டம், இரண்டு ஆறு ஓட்டம் உள்ளடங்கலாக 43 ஓட்டங்களைப் பெற்றனர். இதில் 21 பந்துகளில் அரைச்சதத்தை பூர்த்தி செய்த சீன் வில்லியம்ஸ் சிம்பாப்வே சார்பாக இருபது-20 போட்டிகளில் அதிவேக அரைச்சத சாதனையை சமப்படுத்தினார்.
பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக டவால்ட் ஸட்ரான், அமிர் ஹம்ஸா தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
191 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி ஒரு பந்து மீதமிருக்கையில் வெற்றியிலக்கை அடைந்தது. அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் உஸ்மான் கானி 45 பந்துகளில் மூன்ரு ஆறு ஓட்டங்கள், ஆறு நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 65 ஓட்டங்களையும், குல்படின் நயிப் 31 பந்துகளில் 7 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 56 ஓட்டங்களையும் பெற்றனர்.
போட்டியின் நாயகனாக ஆப்கானிஸ்தான் அணியின் குல்படின் நயிப் தெரிவானார். முதலாவது போட்டியையும் வென்றிருந்த சிம்பாப்வே அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
18 minute ago
31 minute ago
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
31 minute ago
42 minute ago
2 hours ago