Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 22 , மு.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி, இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரில் கலந்து கொண்டிருந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற இரண்டாவது போட்டியிலும் வெற்றியீட்டிய தென்னாபிரிக்க அணி, 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இப்போட்டியின், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணித்தலைவர் பப் டூ பிளிசிஸ், தமது அணி முதலில் களத்தடுப்பில் என தெரிவித்தார். அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, ஜோஸ் பட்லர், 4, ஆறு ஓட்டங்கள், 4, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 28 பந்துகளில் 54 ஓட்டங்களையும் அணித்தலைவர் ஒயின் மோர்கன், 4, ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 38 ஓட்டங்களையும் ஜோ ரூட், 2, ஆறு ஓட்டங்கள், 4, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 34 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில், தென்னாபிரிக்க அணி சார்பாக கைல் அபோட் 3 விக்கெட்டுகளையும் கஜிஸ்கோ ரபடா, கிறிஸ் மொரிஸ் தலா 2 விக்கெட்டுகளையும் இம்ரான் தாகீர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 14.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக ஏ.பி டீ வில்லியர்ஸ், 29 பந்துகளில், 6, ஆறு ஓட்டங்கள், 6, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 71 ஓட்டங்களையும் ஹஷிம் அம்லா, 38 பந்துகளில், 3, ஆறு ஓட்டங்கள், 8, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்களையும் பெற்றனர். இங்கிலாந்து அணி சார்பாக வீழ்த்தப்பட்ட விக்கெட்டை அடில் ரஷீட் வீழ்த்தியிருந்தார்.
இப்போட்டியின் நாயகனாக ஏ.பி டீ வில்லியர்ஸும் தொடரின் நாயகனாக இம்ரான் தாகீரும் தெரிவாகினர்.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago