Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்க, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியில், தென்னாபிரிக்க அணி சிறப்பான வெற்றியைப் பெற்றுக் கொண்டுள்ளது.
செஞ்சூரியனில் இடம்பெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 318 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில் ஜோ றூட் 125 (113), அலெக்ஸ் ஹேல்ஸ் 65 (73), பென் ஸ்டோக்ஸ் 53 (37) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கைல் அபொட், கஜிஸ்கோ றபடா இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
319 என்ற சவாலான இலங்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 46.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் குயின்டன் டீ கொக் 135 (117), ஹஷிம் அம்லா 127 (130), பப் டு பிளெஸிஸ் ஆட்டமிழக்காமல் 33 (29) ஓட்டங்களைப் பெற்றனர்.
இப்போட்டியின் நாயகனாக, குயின்டன் டீ கொக் தெரிவானார். இத்தொடரின் முதலிரு போட்டிகளிலும் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, 2-1 என்ற கணக்கில் இத்தொடரில் இன்னமும் முன்னிலை வகிக்கின்றது.
2 hours ago
2 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
7 hours ago