Shanmugan Murugavel / 2021 நவம்பர் 25 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் கான்பூரில் இன்று ஆரம்பமான குறித்த போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணியின் பதில் தலைவர் அஜின்கியா ரஹானே, தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
இந்திய அணி சார்பாக ஷ்ரேயாஸ் ஐயரும், நியூசிலாந்து சார்பாக றஷின் றவீந்திராவும் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இந்தியா, குறிப்பிட்ட நேரத்திலேயே ஆரம்பத் துடுப்பாட்டவீரர் மாயங்க் அகர்வாலை கைல் ஜேமிஸனிடம் இழந்தது.
தொடர்ந்து ஷுப்மன் கில்லும், செட்டேஸ்வர் புஜாராவும் இனிங்ஸை நகர்த்திய நிலையில், 52 ஓட்டங்களுடன் ஜேமிஸனிடம் கில் வீழ்ந்தார். தொடர்ந்து குறிப்பிட்ட நேரத்தில் 26 ஓட்டங்களுடன் புஜாராவும் டிம் செளதியிடம் வீழ்ந்தார்.
பின்னர் ஓரளவு நேரத்தின் பின்னர் ரஹானேயும் 35 ஓட்டங்களுடன் ஜேமிஸனிடம் விழ இந்தியாவின் நிலை கேள்விக்குறியாக இருந்தது.
எவ்வாறாயினும், அடுத்து வந்த ஐயர், இரவீந்திர ஜடேஜாவின் இணைப்பாட்டத்தில் பலமான நிலையில் இன்றைய முதல் நாள் முடிவில், 4 விக்கெட்டுகளை இழந்து தமது முதலாவது இனிங்ஸில் 258 ஓட்டங்களைப் பெற்றவாறு இந்தியா காணப்படுகின்றது.
தற்போது களத்தில், ஐயர் 75, ஜடேஜா 50 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது காணப்படுகின்றனர்.
2 minute ago
12 minute ago
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
12 minute ago
23 Oct 2025