2026 பெப்ரவரி 05, வியாழக்கிழமை

நான்காமிடத்துக்கு முன்னேறிய திலக் வர்மா

Shanmugan Murugavel   / 2025 டிசெம்பர் 18 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் நான்காமிடத்துக்கு திலக் வர்மா முன்னேறியுள்ளார்.

தென்னாபிரிக்காவுக்கெதிரான மூன்றாவது, நான்காவது போட்டிகளில் 62, 26 ஓட்டங்களைப் பெற்றமையைத் தொடர்ந்தே ஆறாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி நான்காமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. அபிஷேக் ஷர்மா, 2. பில் ஸோல்ட், 3. பதும் நிஸங்க, 4. திலக் வர்மா, 5. ஜொஸ் பட்லர், 6. சஹிப்ஸடா பர்ஹான், 7. ட்ரெவிஸ் ஹெட், 8. மிற்செல் மாஷ், 9. டிம் செய்ஃபேர்ட், 10. சூரியகுமார் யாதவ்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. வருண் சக்கரவர்த்தி, 2. ஜேக்கப் டஃபி, 3. ரஷீட் கான், 4. அப்ரார் அஹ்மட், 5. வனிது ஹசரங்க, 6. அடில் ரஷீட், 7. அகீல் ஹொஸைன், 8. முஸ்தபிசூர் ரஹ்மான், 9. நாதன் எலிஸ், 10. அடம் ஸாம்பா.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. சைம் அயூப், 2. சிகண்டர் ராசா, 3. றொஸ்டன் சேஸ், 4. ஹர்திக் பாண்டியா, 5. மொஹமட் நவாஸ்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X