Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 11 , மு.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான கோப்பா இத்தாலியா தொடரின் இறுதிப் போட்டிக்கு அத்லாண்டா தகுதிபெற்றுள்ளது.
நாப்போலியின் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்த நிலையில், அத்லாண்டாவின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற இரண்டாவது சுற்று அரையிறுதிப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்ற அவ்வணி, 3-1 என்ற மொத்த கோல் கணக்கில் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.
அத்லாண்டா சார்பாக, மட்டியோ பெஸ்ஸினா இரண்டு கோல்களையும், டுவான் ஸபட்டா ஒரு கோலையும் பெற்றனர். நாப்போலி சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹிர்விங்க் லொஸானோ பெற்றிருந்தார்.
44 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
53 minute ago