Shanmugan Murugavel / 2026 ஜனவரி 21 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது நாளை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடருக்கான இங்கிலாந்துக் குழாமில் இடம்பெற்றிருக்கின்ற பென் டக்கெட் ஓட்டங்களைப் பெற்று தனதிடத்தை உறுதிப்படுத்த வேண்டியுள்ளதோடு, மூன்றாண்டுகளுக்குப் பின்னர் ஒருநாள் குழாமில் இடம்பெற்றுள்ள ஸக் குறோலிக்கு தனதிடத்தை உறுதிப்படுத்த இத்தொடர் சிறந்த வாய்ப்பாகக் காணப்படுகின்றது.
இதுதவிர இலங்கையிலும் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடர் நடைபெறவுள்ள நிலையில் றெஹான் அஹ்மட், சாம் கர்ரன் ஆகியோரை பரிசோதிக்கும் வாய்ப்பாகவும் இத்தொடர் காணப்படுகின்றது. டொம் பன்டனுக்கும் அணியில் தொடர்ச்சியான வாய்ப்பு இத்தொடரில் கிடைக்கைப் பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபக்கமாக இலங்கையின் துஷ்மந்த சமீர, வனிது ஹசரங்கவுக்கு இத்தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளதுடன், இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத்துக்கு முன்பாக விளையாடும் நேரத்தைப் பெறுவதற்காக தனஞ்சய டி சில்வா குழாமில் இடம்பெற்றுள்ளார்.
5 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
4 hours ago