Editorial / 2020 ஜனவரி 19 , பி.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், நியூகாசில் யுனைட்டெட் அணியின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணி உடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் செல்சி தோல்வியடைந்தது.
நியூகாசில் யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை இஸாக் ஹெய்டன் பெற்றிருந்தார்.
இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற கிறிஸ்டல் பலஸுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி முடித்துக் கொண்டிருந்தது.

மன்செஸ்டர் சிற்றி சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் சேர்ஜியோ அகுரோ பெற்றிருந்தார். கிறிஸ்டல் பலஸ் சார்பாக செங்க் டொசுன் ஒரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.
இந்நிலையில், வட்பேர்ட்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் முடித்துக் கொண்டிருந்தது.
இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற ஷெஃபீல்ட் யுனைட்டெட்டுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் ஆர்சனல் முடித்துக் கொண்டிருந்தது.
ஆர்சனல் சார்பாகப் பெறப்பட்ட கோலை கப்ரியல் மார்டினெல்லி பெற்றதோடு, ஷெஃபீல்ட் யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜோன் ஃபிளெக் பெற்றிருந்தார்.
இந்நிலையில், வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் எவெர்ற்றன் முடித்துக் கொண்டிருந்தது.
எவெர்ற்றன் சார்பாகப் பெறப்பட்ட கோலை டொமினிக் கல்வேர்ட்-லூயின் பெற்றதோடு, வெஸ்ட் ஹாம் யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை இஸா டியொப் பெற்றிருந்தார்.
14 minute ago
27 minute ago
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
27 minute ago
38 minute ago
2 hours ago