Freelancer / 2023 நவம்பர் 26 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நியூகாசில் யுனைட்டெட்டின் மைதானத்தில் சனிக்கிழமை (25)நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-4 என்ற கோல் கணக்கில் செல்சி தோற்றது.
செல்சி சார்பாகப் பெறப்பட்ட கோலை ரஹீம் ஸ்டேர்லிங்க் பெற்றார். நியூகாசில் சார்பாக, அலெக்ஸான்டர் இஸாக், ஜமால் லஸ்செல்லஸ், ஜொலின்டன், அந்தோனி கோர்டன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை, நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் சமப்படுத்தியது. சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை எர்லிங் பிறோட் ஹலாட் பெற்றதோடு, லிவர்பூல் சார்பாகப் பெறப்பட்ட கோலை ட்ரென்ட் அலெக்ஸான்டர்-அர்னோல்ட் பெற்றிருந்தார்.
19 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago