Shanmugan Murugavel / 2021 ஜனவரி 03 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்துக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கிறைஸ்ட்சேர்ச்சில் இன்று ஆரம்பமான இரண்டாவது டெஸ்டின் இன்றைய முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் போராடி வருகின்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்தின் அணித்தலைவர் கேன் வில்லியம்ஸன், தமதணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடும் என அறிவித்தார். பாகிஸ்தான் சார்பாக கடந்த போட்டியில் விளையாடிய யசீர் ஷாவுக்குப் பதிலாக ஸஃபார் கொஹர் இடம்பெற்றிருந்தார். நியூசிலாந்து சார்பாக கடந்த போட்டியில் விளையாடிய மிற்செல் சான்ட்னெர், நீல் வக்னருக்குப் பதிலாக டரைல் மிற்செல், மற் ஹென்றி ஆகியோர் களமிறங்கியிருந்தனர்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய பாகிஸ்தான், ஆரம்பத்திலேயே ஷண் மசூட்டை டிம் செளதியிடன் இழந்தது. பின்னர் அபிட் அலியும், அஸார் அலியும் பாகிஸ்தானின் இனிங்ஸை கட்டியெழுப்பினர்.
பின்னர், அபிட் அலி, ஹரிஸ் சொஹைல், பவட் அலாம் ஆகியோர் அடுத்தடுத்து கைல் ஜேமிஸனிடம் ஆட்டமிழக்க பாகிஸ்தான் தடுமாறியது. எனினும், அஸார் அலி, மொஹமட் றிஸ்வானின் இணைப்பாட்டத்தில் இனிங்ஸை பாகிஸ்தான் கட்டியெழுப்பியது.
ஜேமிஸனிடம் றிஸ்வான் வீழ்ந்த பின்னர் பாஹீம் அஷ்ரஃப்புடன் இணைந்து அஸார் அலி இனிங்ஸை நகர்த்தியதுடன், பின்னர் அவர் ஹென்றியிடம் வீழ்ந்த நிலையில், அஷ்ரஃப்பும், ஸஃபார் கொஹரும் இனிங்ஸை நகர்த்திச் சென்றனர்.
எவ்வாறாயினும், ஜேமிஸன், செளதி, டரெண்ட் போல்டிடம் விக்கெட்டுகள் விழ, சகல விக்கெட்டுகளையும் இழந்து தமது முதலாவது இனிங்ஸில் 297 ஓட்டங்களை பாகிஸ்தான் பெற்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: நியூசிலாந்து
பாகிஸ்தான்: 297/10 (துடுப்பாட்டம்: அஸார் அலி 93, மொஹமட் றிஸ்வான் 61, பாஹீம் அஷ்ரஃப் 48, ஸஃபார் கொஹர் 34 ஓட்டங்கள். பந்துவீச்சு: 5/69, டிம் செளதி 2/61, மற் ஹென்றி 1/68, ட்ரெண்ட் போல்ட் 2/82)
4 minute ago
37 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
37 minute ago
51 minute ago
1 hours ago