2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நியூசிலாந்துக்கெதிரான தொடரைச் சமப்படுத்துமா இந்தியா?

Shanmugan Murugavel   / 2022 நவம்பர் 30 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், கிறைஸ்ட்சேர்ச்சில் இன்று காலை 7 மணிக்கு நடைபெறவுள்ள மூன்றாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாலே தொடரைச் சமப்படுத்த முடியும் என்ற நிலையில் இப்போட்டி நடைபெறுகிறது.

இத்தொடர் முழுவதும் போல மழையால் பாதிக்கப்பட்டது போல இப்போட்டியும் மழையால் பாதிக்கப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுவதுடன், குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டியாகவே நடைபெறக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகின்றது.

தொடர்ந்து சொதப்பி வருகின்ற றிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதோடு, சஞ்சு சாம்ஸனுக்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றமையானது இணையவெளியில் பேசுபொருளாகக் காணப்படுகின்ற நிலையில் அணியில் இடம்பெறும் வீரர்கள் நிச்சயமாக அதிகம் இப்போட்டியில் கவனிக்கப்படுவர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X