2025 ஒக்டோபர் 20, திங்கட்கிழமை

நியூசிலாந்தை வீழ்த்திய அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 02 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்களின் உலகக் கிண்ணத்தில், இந்தூரில் புதன்கிழமை (01) நடைபெற்ற நியூசிலாந்துடனான போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா ஒரு கட்டத்தில் 128 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தபோதும் அஷ்லெய் கார்ட்னரின் 115 (83) ஓட்டங்கள் மூலம் 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 326 ஓட்டங்களைப் பெற்றது. பீபீ லிச்பீல்ட் 45 (31), கிம் கார்ட் 38 (37), எலைஸ் பெரி 33 (41), தஹிலா மெக்ராத் 26 (34) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் லீ தஹுஹு 3, ஜெஸ் கெர் 3, அமெலியா கெர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு 327 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து சார்பாக அணித்தலைவர் சோபி டெவின் தனித்து போராடியிருந்த நிலையில் 43.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 237 ஓட்டங்களைப் பெற்று 89 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. டெவின் 112 (112), அமெலியா கெர் 33 (56), இஸபெல்ல கேஸ் 28 (18), ப்ரூக் ஹலிடே 28 (38) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அனபெல் சதர்லேன்ட் 3, சோபி மொலினெக்ஸ் 3, அலனா கிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இப்போட்டியின் நாயகியாக கார்ட்னர் தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .