Shanmugan Murugavel / 2025 நவம்பர் 04 , பி.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது ஒக்லன்டில் புதன்கிழமை (05) காலை 11.45 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பமாகின்றது.
உலகக் கிண்ணமானது மூன்று மாதங்களில் வரவுள்ள நிலையில் இரண்டு அணிகளும் தங்களது சிறந்த 11 வீரர்களை அடையாளம் காண ஐந்து போட்டிகள் கொண்ட தொடரானது உதவும். உலகக் கிண்ணமானது இந்தியா, இலங்கையில் இடம்பெறவுள்ளதால் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களே காணப்படுமென்றபோதும் தற்கால தட்டை ஆடுகளமென கருதப்படுகையில் போட்டி நிலைமைகள் ஒரே மாதிரியானதாகவே காணப்படும்.
கேன் வில்லியம்சன் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் ஓய்வு பெற்றமையானது நிலையான, சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ளும் திறனை நியூசிலாந்து தவறவிடுகின்றபோதும் டரைல் மிற்செல், டெவொன் கொன்வே ஆகியோரும் இப்பணியை ஆற்றக்கூடியவர்களாக உள்ளனர்.
ஸகரி போக்ஸ், பிளையர் டிக்னர் உள்ளிட்டோர் சிறப்பாகச் செயற்படுகின்ற நிலையில் நாதன் ஸ்மித் பெறுபேற்றை வெளிக்காட்ட வேண்டியுள்ளது.
மறுபக்கமாக இருபதுக்கு – 20 போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் பலமானதாகவே காணப்படுகின்ற நிலையில் அகீம் அகஸ்டே, ஷாமர் ஸ்பிறிங்கர் போன்றோர் அவதானிக்கப்படுகின்றனர்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago