Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜூலை 18 , பி.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையணியின் பயிற்சியாளர் குழாமானது, பங்களாதேஷுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை நிறைவடைந்த பின்னர் முழுமையாக இலங்கை கிரிக்கெட் சபையால் மாற்றப்படும் எனத் தெரிகிறது.
குறித்த நகர்வானது சில காலமாக எதிர்பார்க்கப்பட்டநிலையில், பங்களாதேஷுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் பின்னர் இலங்கையணியின் பயிற்சியாளர் குழாமை இராஜினாமா செய்யுமாறு விளையாட்டமைச்சர் ஹரின் பெர்ணான்டோ வலியிறுத்தியுள்ளார்.
இந்நிலையில், ஹரின் பெர்ணான்டோவின் கோரிக்கைக்கு பதிலளித்துள்ள இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா, தாங்களும் அவரின் கோரிக்கையுடன் ஒத்திருப்பதாகவும், வெளிநாட்டிலுள்ள தாங்கள் நாட்டுக்கு வந்த பின்னர் என்ன செய்யலாம் எனப் பார்ப்பதாகவும் தாங்கள் அவருடன் முதலில் கதைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இலங்கையின் பயிற்சிலாளர் குழமானது, தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க, துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளர் ஜோன் லூயிஸ், களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளர் ஸ்டீவ் றிக்ஸனை உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது.
ஜோன் லூயிஸ், ஸ்டீவ் றிக்ஸனின் ஒப்பந்தங்கள் உலகக் கிண்ணத்துடன் முடிவடைந்துள்ள நிலையில், ஹத்துருசிங்க கைச்சாத்திட்ட ஒப்பந்தமானது இன்னும் 16 மாதங்களைக் கொண்டுள்ளது.
அந்தவகையில், சில வீரர்கள், பயிற்சியாளர்களுடன் ஹத்துருசிங்க முரண்பட்டுள்ளபோதும், ஹத்துருசிங்கவின் ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதால் ஏற்படக்கூடிய அதிக செலவீனம் காரணமாக அண்மைய மாதங்களில் சிக்கலான நிலைமையை இலங்கை கிரிக்கெட் சபை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்து இலங்கையை வந்தடமையை அடுத்து இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில், தனது ஒப்பந்த காலத்தில் எஞ்சியுள்ள 16 மாதங்களுக்கும் தனது பதவியில் தொடர விரும்புவதாகக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago
9 hours ago