Shanmugan Murugavel / 2016 ஜனவரி 25 , மு.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரில் அவுஸ்திரேலியா விளையாடவுள்ள நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் அவுஸ்திரேலியக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்குழாமில், அனைத்து வகையான போட்டிகளிலும் தொடர்ச்சியாக சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தி வரும் துடுப்பாட்டவீரர் உஸ்மான் கவாஜா குழாமில் இடம்பெற்றிருக்கவில்லை. தவிர, இந்தியாவுக்கெதிரான இறுதி இரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்ற சுழற்பந்துவீச்சாளர் நேதன் லைனும் குழாமில் இடம்பெற்றிருக்கவில்லை.
இந்நிலையில், அவுஸ்திரேலியாவின் மட்டுபடுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில், சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்திய இளம் புறச் சுழற்பந்துவீச்சாளர் அடம் ஸாம்பா, முதற்தடவையாக அவுஸ்திரேலியக் குழாமில் இடம்பெற்றுள்ளார்.
குழாம் – ஸ்டீவன் ஸ்மித் (தலைவர்), டேவிட் வோணர், ஜோர்ஜ் பெய்லி, ஸ்கொட் போலண்ட், ஜேம்ஸ் போக்னர், ஆரோன் பின்ஞ், ஜோன் ஹேஸ்டிங்ஸ், ஜோஷ் ஹேசில்வூட், மிட்செல் மார்ஷ், ஷோர்ன் மார்ஷ், கிளென் மக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்ஸன், மத்தியூ வேட் (விக்கெட் காப்பாளர்), அடம் ஸாம்பா
16 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
55 minute ago
1 hours ago