Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 23 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசியக் கிண்ணப் போட்டிகளின் பிரதான சுற்று, நாளை ஆரம்பிக்கவுள்ளது. போட்டிகளை நடாத்தும் பங்களாதேஷ் அணியை எதிர்த்து, இந்திய அணி மோதவுள்ளது. இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு, இந்தப் போட்டி ஆரம்பிக்கவுள்ளது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகளும், தகுதிகாண் சுற்றின் மூலம் தெரிவாகிய ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள், இப்போட்டிகளில் பங்குபற்றுகின்றன.
ஆப்கானிஸ்தான், ஓமான், ஹொங் கொங், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் பங்குபற்றிய தகுதிகாண் போட்டிகளில் 3 போட்டிகளிலும் வெற்றிபெற்ற ஐக்கிய அரபு அமீரகம், பிரதான சுற்றுக்குத் தகுதிபெற்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி, 2 போட்டிகளில் வெற்றிபெற்று, தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது.
ஆசியக் கிண்ணப் போட்டிகள் இம்முறை, இருபதுக்கு-20 போட்டிகளாக விளையாடப்படவுள்ள நிலையில், விறுவிறுப்பான போட்டிகளை வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
13ஆவது தடவையாக இடம்பெறவுள்ள ஆசியக் கிண்ணப் போட்டிகளின், நடப்புச் சம்பியனாக, இலங்கை அணி காணப்படுகிறது. அவ்வணி, பாகிஸ்தான் அணிக்கெதிராக இடம்பெற்ற இறுதிப் போட்டியில், லஹிரு திரிமான்னவின் சதத்தின் உதவியோடும் லசித் மாலிங்கவின் 5 விக்கெட்டுகளின் உதவியோடும் வெற்றிபெற்று, சம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. இதன்படி, ஆசியக் கிண்ணத்தை, இந்திய அணியும் இலங்கை அணியும் தலா 5 தடவைகள் இப்பட்டத்தைக் கைப்பற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
49 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago