Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, மூன்று, ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட இறுதி சப்பல்-ஹட்லி தொடரில் விளையாடவுள்ள நிலையில், இத்தொடரின் முதலாவது போட்டி, இலங்கை நேரப்படி காலை 6.30 மணிக்கு ஒக்லாந்தில் நாளை ஆரம்பமாகவுள்ளது.
இரண்டு அணிகளிலுமே அதிரடி வீரர்கள் இருக்கின்ற நிலையில, பந்து ஸ்விங் ஆகாமல் விட்டால், நியூசிலாந்திலுள்ள சிறிய மைதானங்களில் இரண்டு அணிகளும் 350 ஓட்டங்களை இலகுவாக தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அணி, தனது விளையாடும் பதினொருவரை ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில், காயமடைந்த ஆரம்பத் துடுப்பாட்டவீரர் ஆரோன் பின்ஞ்க்கு பதிலாக குழாமில் இணைத்துக்கொள்ளப்பட்ட உஸ்மான் கவாஜா, விளையாடும் அணியில் இணைத்துக்கொள்ளப்படவில்லை என்பதுடன் வேகப்பந்துவீச்சாளர் ஸ்கொட் போலண்ட், சுழற்பந்துவீச்சாளர் அடம் ஸாம்பா ஆகியோரும் அணியில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.
மறுபுறம், தனது இறுதி ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணித்தலைவர் பிரெண்டன் மக்கலத்திடமிருந்து அவ்வணி ஓட்டங்களை எதிர்பார்த்துள்ளது.
அவுஸ்திரேலிய அணி- ஷோர்ன் மார்ஷ், டேவிட் வோணர், ஸ்டீவன் ஸ்மித் (தலைவர்), ஜோர்ஜ் பெய்லி, கிளென் மக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ், மத்தியூ வேட் (விக்கெட் காப்பாளர்), ஜேம்ஸ் போக்நர், ஜோன் ஹேஸ்டிங்ஸ், கேன் ரிச்சர்ட்ஸன், ஜோஷ் ஹேசில்வூட்
எதிர்பார்க்கப்படும் நியூசிலாந்து அணி- மார்ட்டின் கப்தில், பிரெண்டன் மக்கலம் (தலைவர்), கேன் வில்லியம்ஸன், ஹென்றி நிக்க்கோல்ஸ், கிராண்ட் எலியற், கொரே அன்டர்சன், லுக் ரோங்கி (விக்கெட் காப்பாளர்), மிட்செல் சாண்ட்னர், அடம் மில்ன், மற் ஹென்றி, ட்ரெண்ட் போல்ட்
4 hours ago
4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago
8 hours ago