Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி, நாளை ஆரம்பிக்கவுள்ளது. கொழும்பு பி. சரவணமுத்து (சரா ஓவல்) மைதானத்தில் இப்போட்டி இடம்பெறவுள்ளது.
இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டியில் இலங்கை அணி, ஓர் இனிங்ஸ் மற்றும் 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்த நிலையில், இப்போட்டியிலும் வெற்றிபெறுவதற்கான அதிக வாய்ப்புகளுடன் களமிறங்குகின்றது.
எனினும், அடிக்கடி மாறிவரும் கொழும்பின் வானிலை, இப்போட்டியில் தாக்கத்தைச் செலுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது. மாலை நேரங்களில் பெய்யும் மழை, ஒவ்வொரு நாளும் 90 ஓவர்கள் வீசுவதை அனேகமாகத் தடுக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
முதலாவது போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணியில், லஹிரு திரிமான்னவும் தரிந்து கௌஷாலும் அழுத்தத்துக்குள்ளாகியுள்ளனர். உப தலைவர் என்ற வகையில் லஹிரு திரிமான்னவுக்கு இப்போட்டியில் வாய்ப்பு வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், தரிந்து கௌஷாலுக்குப் பதிலாக டில்ருவான் பெரேராவுக்கு இடம் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.
5 minute ago
10 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
10 minute ago
19 minute ago