2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

நாளைய உலக இருபதுக்கு-20 போட்டிகள்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 15 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று ஆரம்பிக்கவுள்ள உலக இருபதுக்கு-20 தொடரில், நாளை இடம்பெறவுள்ள போட்டிகளில் பாகிஸ்தான் அணியும் பங்களாதேஷ் அணியும் முதற்போட்டியில் பங்குபற்றவுள்ளதோடு, இங்கிலாந்து அணியும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் இரண்டாவது போட்டியில் பங்குபற்றவுள்ளன.

பங்களாதேஷ் - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நாளை பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது. இரண்டாவது போட்டி, இரவு 7.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

அண்மையில் நிறைவடைந்த ஆசியக் கிண்ணப் போட்டிகளில் இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்த பங்களாதேஷ் அணி, அதிக தன்னம்பிக்கையுடன் களமிறங்குகிறது. அவ்வணியை எதிர்த்து விiளையாடும் பாகிஸ்தான் அணி, ஆசியக் கிண்ணப் போட்டிகளில் அவ்வளவு சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்தாத போதிலும், உலக இருபதுக்கு-20 தொடர்களில் வழக்கமாச் சிறப்பாக விளையாடும் திறனுடையது என்பதால், எதிர்பார்ப்புகளுடன் களமிறங்குகிறது.

பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்களான மொஹமட் ஆமிர், மொஹமட் இர்பான், வஹாப் றியாஸ் போன்றவர்கள், பங்களாதேஷ் அணிக்குச் சவாலாக அமைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. மறபுறத்தில் மகமதுல்லா, தமிம் இக்பால், ஷகிப் அல் ஹசன், முஷ்பிக்கூர் ரஹீம் ஆகியோர், சிறப்பான துடுப்பாட்டத் திறமையை வெளிப்படுத்தும் எதிர்பார்ப்புடனுள்ளனர்.

இரண்டாவது போட்டியில் மோதவுள்ள இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள், பலமான துடுப்பாட்ட வரிசைகளைக் கொண்ட அணிகளாகக் கருதப்படுகின்றன. இரு அணிகளிலும் அதிரடித் துடுப்பாட்ட வீரர்கள் காணப்படுவதோடு, இருபதுக்கு-20 போட்டிகளில் சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்தக்கூடிய திறன்களையும் அவ்வணிகள் கொண்டுள்ளன. ஆனால், இரு அணிகளுமே அனுபவமற்ற தன்மையைக் கொண்டுள்ளன. அத்தோடு, இங்கிலாந்து அணியால் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளும் தன்மை காணப்படுகிறதா என்பதும் கேள்வியாகவே உள்ளது.

இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ றூட், ஜொஸ் பட்லர், கிறிஸ் ஜோர்டன் போன்றோர் முக்கிய வீரர்களாக உள்ள நிலையில், அன்ட்ரே றசல், டுவைன் பிராவோ, கிறிஸ் கெயில் ஆகியோர் மேற்கிந்தியத் தீவுகளின் முக்கிய வீரர்களாக உள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .