2026 மே 01, வெள்ளிக்கிழமை

புகைப்பிடித்த பராக்குக்கு அபராதம்

Shanmugan Murugavel   / 2026 ஏப்ரல் 30 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) ராஜஸ்தான் றோயல்ஸின் அணித்தலைவர் ரியான் பராக், புதிய சண்டிஹாரில் செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸுக்கெதிரான போட்டியின்போது வீரர்களின் அறையில் புகைப்பிடித்ததைத் தொடர்ந்து போட்டி ஊதியத்தின் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஒரு தண்டப் புள்ளியும் விதிக்கப்பட்டது.

குவஹாத்தியில் நடப்புச் சம்பியன்கள் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கெதிரான போட்டியின்போது வீரர்கள் அமர்ந்திருக்குப் பகுதியில் ராஜஸ்தான் றோயல்ஸின் முகாமையாளர் றோமி பிந்தர் அலைபேசி பயன்படுத்தியதைத் தொடர்ந்து 100,000 இந்திய ரூபாய்கள் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .