2026 ஜனவரி 14, புதன்கிழமை

பகலிரவு ஆஷஸ் டெஸ்ட்களை நிராகரிக்கவுள்ள இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2026 ஜனவரி 14 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள அடுத்த ஆஷஸ் தொடரில் மின்னொளியில் மென்சிவப்பு நிற பந்தொன்றைப் பயன்படுத்தி பகலிரவு டெஸ்ட்டொன்றை விளையாடும் எந்தவொரு முன்மொழிவுகளையும் நிராகரிக்க இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது.

ஆஷஸைத் தொடர்ந்ததான சிரேஷ்ட அதிகாரிகளுக்கிடையிலான பேச்சுக்களின்போதே இங்கிலாந்து கிரிக்கெட் சபையானது 2029-30 தொடருக்கான தமது நிலைய அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையிடம் இனங்காட்டியதாகக் கூறப்படுகிறது.

இறுதியாக ஆஷஸில் பிறிஸ்பேணில் நடைபெற்ற பகலிரவுப் போட்டியில் இங்கிலாந்து படுதோல்வியடந்தமை குறிப்பிடத்தக்கது.

மெல்பேணினில் முதலாவது டெஸ்ட் விளையாடப்பட்ட 150ஆவது ஆண்டைக் குறிக்கும் முகமாக 2027 மார்ச்சில் ஒற்றை பகலிரவு டெஸ்ட்டில் இங்கிலாந்தும், அவுஸ்திரேலியாவும் விளையாடவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .