2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பாகிஸ்தானுக்கெதிராக முதலில் துடுப்பெடுத்தாடவுள்ள இலங்கை

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 23 , பி.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கெதிரான ஆசியக் கிண்ண சுப்பர் 4 சுற்றுப் போட்டியில் இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில் நடைபெற்ற நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தானின் அணித்தலைவர் சல்மான் அக்ஹா, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.

இலங்கையணியில் கடந்த போட்டியில் விளையாடிய டுனித் வெல்லலாகே, கமில் மிஷாரவை சாமிக கருணாரத்ன, மகேஷ் தீக்‌ஷன ஆகியோர் பிரதியிட்டிருந்தனர்.

இலங்கையணி: பதும் நிஸங்க, குசல் மென்டிஸ் (விக்கெட் காப்பாளர்), குசல் பெரேரா, சரித் அசலங்க (அணித்தலைவர்), தசுன் ஷானக, கமிந்து மென்டிஸ், வனிது ஹசரங்க, சாமிக கருணாரத்ன, மகேஷ் தீக்‌ஷன, துஷ்மந்த சமீர, நுவான் துஷார.

பாகிஸ்தான்: ஷகிப்ஸடா பர்ஹான், பக்கர் ஸமன், சைம் அயூப், ஹுஸைன் தலாட், மொஹமட் நவாஸ், சல்மான் அக்ஹா (அணித்தலைவர்), பஹீம் அஷ்ரஃப், மொஹமட் ஹரிஸ் (விக்கெட் காப்பாளர்), ஷகீன் அஃப்ரிடி, ஹரிஸ் றாஃப், அப்ரார் அஹ்மட்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .