Shanmugan Murugavel / 2026 மே 07 , பி.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது மிர்ப்பூரில் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் தொடங்குகின்றது.
பங்களாதேஷின் தஸ்கின் அஹ்மட், நஹிட் ரானா, ஷொரிஃபுல் இஸ்லாம், எபொடொட் ஹொஸைனை உள்ளடக்கிய வேகப்பந்துவீச்சுக் குழாமுக்கும் பாகிஸ்தானின் அணித்தலைவர் ஷண் மசூட், பாபர் அஸாம், மொஹமட் றிஸ்வான், சல்மான் அக்ஹா, செளட் ஷகீல் ஆகியோருக்கிடையிலான மோதலே இத்தொடரின் போக்கை தீர்மானிக்குமென நம்பபடுகிறது.
முடிவடைந்த பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் பாபரின் போமானது பாகிஸ்தானுக்கு கைகொடுக்குமென நம்பப்படுகிறது. மறுபக்கமாக பாகிஸ்தானின் மொஹமட் அப்பாஸ், ஷகீன் ஷா அஃப்ரிடி, குராம் ஷஷாட், ஹஸன் அலியை உள்ளடக்கிய வேகப்பந்துவீச்சுக் குழாமையும் குறைத்து மதிப்பிடுவதுக்கில்லை. சஜிட் கான், நொமன் அலி என சுழற்பந்துவீச்சும் பலமானதாகவே காணப்படுகிறது.
பங்களாதேஷில் மெஹிடி ஹஸன் மிராஸின் அண்மைய பெறுபேறுகள் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என்றபோதும் தஜியுல் இஸ்லாம், நயீம் ஹஸன் ஆகியோர் சிறப்பாகவே செயற்படுகிறார்கள்.
56 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago
2 hours ago