2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

பங்களாதேஷுக்கெதிராக வெற்றியை நோக்கி பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 29 , பி.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான முதலாவது டெஸ்டில் வெற்றியை நோக்கி பாகிஸ்தான் பயணிக்கிறது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், சட்டோகிராமில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த இந்த டெஸ்டின் இன்றைய நான்காம் நாளை 4 விக்கெட்டுகளை இழந்து 39 ஓட்டங்களைப் பெற்றவாறு தமது இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ், ஆரம்பத்திலேயே ஹஸன் அலியிடம் முஷ்பிக்கூர் ரஹீமை இழந்திருந்தது.

பின்னர் யாசிர் அலியும், லிட்டன் தாஸும் இனிங்ஸைக் கட்டியெழுப்பிய நிலையில், பந்து தலையில் தாக்கிய அலி அதிர்ச்சி காரணமாக 36 ஓட்டங்களுடன் போட்டியிலிருந்து விலகினார். தொடர்ந்து வந்த மெஹிடி ஹஸன் மிராஸ் மற்றும் அலியைப் பிரதியிட்ட நுருல் ஹஸன் ஆகியோர் சஜிட் கானிடம் குறிப்பிட்ட நேரத்தில் வீழ்ந்தனர்.

கடைசியாக 59 ஓட்டங்களுடன் ஷகீன் ஷா அஃப்ரியிடம் தாஸும் வீழ்ந்த நிலையில், தஜியுல் இஸ்லாம் சிறிது நேரத்தில் சஜிட் கானிடமும், அபு ஜயெட் அஃப்ரியிடமும் உடனேயே விழ சகல விக்கெட்டுகளையும் இழந்து 157 ஓட்டங்களையே தமது இரண்டாவது இனிங்ஸில் பங்களாதேஷ் பெற்றது.

இந்நிலையில், 202 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான், இன்றைய நான்காம் நாள் ஆட்டமுடிவில் விக்கெட் இழப்பின்றி 109 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தற்போது களத்தில், அபிட் அலி 56, அப்துல்லா ஷஃபிக் 53 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் காணப்படுகின்றனர்.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்

பங்களாதேஷ்: 330/10 (துடுப்பாட்டம்: லிட்டன் தாஸ் 114, முஷ்பிக்கூர் ரஹீம் 91, மெஹிடி ஹஸன் மிராஸ் ஆ.இ 38 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹஸன் அலி 5/51, பாஹீம் அஷ்ரப் 2/54, ஷகீன் ஷா அஃப்ரிடி 2/70, சஜிட் கான் 1/79)

பாகிஸ்தான்: 286/10 (துடுப்பாட்டம்: அபிட் அலி 133, அப்துல்லா ஷஃபிக் 52, பாஹீம் அஷ்ரப் 38 ஓட்டங்கள். பந்துவீச்சு: தஜியுல் இஸ்லாம் 7/116, எபொடொட் ஹொஸைன் 2/47, மெஹிடி ஹஸன் மிராஸ் 1/68)

பங்களாதேஷ்: 157/10 (துடுப்பாட்டம்: லிட்டன் தாஸ் 59, யாசிர் அலி 36 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகீன் ஷா அஃப்ரிடி 5/32, சஜிட் கான் 3/33, ஹஸன் அலி 2/52)

பாகிஸ்தான்: 109/0 (துடுப்பாட்டம்: அபிட் அலி ஆ.இ 56, அப்துல்லா ஷஃபிக் ஆ.இ 53 ஓட்டங்கள்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .