2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

பங்களாதேஷை வெல்லுமா அயர்லாந்து?

Shanmugan Murugavel   / 2025 நவம்பர் 18 , பி.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், அயர்லாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது சியல்ஹெட்டில் நாளை காலை 9 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே பங்களாதேஷ் வென்ற நிலையில், இப்போட்டியை வென்றாலே அயர்லாந்து சமப்படுத்த முடியும். அதற்கு போல் ஸ்டேர்லிங்க், அணித்தலைவர் போல்பிரயன், ஹரி டெக்டர், கேட்டிஸ் கம்பர், லொர்கன் டக்கரிடமிருந்து பெரிய இனிங்ஸ்கள் தேவையாகவுள்ளது.

இதுதவிர அன்டி மக்பிரைன், மத்தியூ ஹம்பிறேய்ஸிடமிருந்தும் பங்களாதேஷ் துடுப்பாட்டவீரர்களை விரைவாக ஆட்டமிழக்கச் செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்போட்டிக்கான ஆடுகளமும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கின்ற நிலையில் கிறேய்க் யங்குக்குப் பதிலாக மேலதிக சுழற்பந்துவீச்சாளர் களமிறங்கக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.

பங்களாதேஷில் நஹிட் ரானாவுக்குப் பதில் எபொடொட் ஹொஸைன் களமிறங்கக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X