Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 01 , மு.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரிலும் பங்களாதேஷை நியூசிலாந்து வெள்ளையடித்துள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வென்றிருந்த நியூசிலாந்து, ஒக்லன்டில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே, 3-0 என பங்களாதேஷை நியூசிலாந்து வெள்ளையடித்துள்ளது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பங்களாதேஷின் பதிலணித்தலைவர் லிட்டன் தாஸ், நியூசிலாந்தை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.
மழை காரணமாக 10 ஓவர்களாக நடைபெற்ற இப்போட்டியில் பிடியெடுப்புகள் தவறவிடப்பட்ட நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, பின் அலென்னின் 71 (29), மார்டின் கப்திலின் 44 (19), கிளென் பிலிப்ஸின் 14 (06), டரைல் மிற்செல்லின் 11 (06) ஓட்டங்களோடு, 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு, 142 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், டிம் செளதி (3), டொட் அஸ்டில் (4), அடம் மில்ன் (1), லொக்கி பெர்கியூசன் (1), கிளென் பிலிப்ஸிடம் (1) தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, 9.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 76 ஓட்டங்களையே பெற்று 65 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக பின் அலென்னும், தொடரின் நாயகனாக கிளென் பிலிப்ஸும் தெரிவாகினர்.
15 minute ago
28 minute ago
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
28 minute ago
39 minute ago
2 hours ago