Shanmugan Murugavel / 2021 மார்ச் 09 , பி.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ தொடரைத் தொடர்ந்து தனது பதவியிலிருந்து ஜேர்மனி முகாமையாளர் ஜோச்சிம் லோ விலகவுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு வரை ஒப்பந்தத்தைக் கொண்டுள்ள லோ, 17 ஆண்டுகளின் பின்னர் தேசிய அணியிலிருந்து விலகுகின்றார். இதில் 15 ஆண்டுகள் தலைமைப் பயிற்றுவிப்பாளராகவிருந்தார்.
ஜேர்மனியை 189 போட்டிகளில் பயிற்றுவித்திருந்த லோ, 120 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருந்ததுடன், 31 போட்டிகளில் தோல்வியடைந்திருந்தார்.
ஜுர்ஜன் கிளின்ஸ்மன்னுக்கு உதவிப் பயிற்றுவிப்பாளராக 2004ஆம் ஆண்டு ஜேர்மனியுடன் இணைந்த லோ, 2006ஆம் ஆண்டு தலைமைப் பயிற்றுவிப்பாளராகி, 2008ஆம் ஆண்டு யூரோவையும், 2014ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தையும் வென்றிருந்தார்.
இந்நிலையில், லோவைப் பிரதியிடத் தயாரில்லை என இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் முகாமையாளர் ஜுர்ஜன் க்ளொப் தெரிவித்துள்ளார்.
19 minute ago
32 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
32 minute ago
43 minute ago
2 hours ago