Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 04 , பி.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
றக்பி உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்தின் மோசமான பெறுபேற்றுக்குப் பொறுப்பேற்பதாக, இங்கிலாந்து அணியின் பயிற்றுநரான ஸ்டுவேர்ட் லாங்க்ஸ்டர் தெரிவித்துள்ளார். அத்தோடு, அணியின் பயிற்றுநர் பதவியிலிருந்து விலகுவது பற்றி ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவுக்கெதிரான தோல்வியையடுத்து, 'கூ" சத்தமெழுப்பப்பட்டு இங்கிலாந்து அணிக்கான எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்ட நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பயிற்றுநராகத் தொடர்ந்தும் நீடிப்பது குறித்து ஆராய வேண்டியுள்ளதாகத் தெரிவித்த அவர், இன்னமும் ஒரு வாரம் காணப்படுகின்றது எனவும், ஆனால், தோல்விக்குப் பொறுப்பேற்பதாகவும், பொறுப்புக் கூறும் கடமை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.
'நாங்கள் எவ்வளவு ஏமாற்றமடைந்துள்ளோம் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. அற்புதமான எங்கள் ஆதரவாளர்களை நாம் கைவிட்டுவிட்டோம்" என அவர் தெரிவித்தார்.
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026