Shanmugan Murugavel / 2015 நவம்பர் 03 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக் அமைப்பின் பிரதம நடவடிக்கை அலுவலரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் தவிசாளரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் முன்னாள் தலைவருமான கே. ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கமானவருமான சுந்தர் ராமன், தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஐ.பி.எல் ஆரம்பித்ததிலிருந்து தனது பதவியை வகித்து வந்த ராமன், 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற மோசடிகளில் பங்குபற்றினார் அல்லது அதற்கு அனுமதியளித்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
அதற்கான விசாரணைகளுக்காக, லோதா செயற்குழுவின் முன்னால், நவம்பர் 15ஆம் திகதி ஆஜராக அழைக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அவர் பதவி விலகியுள்ளார்.
வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில், பதவி விலக வேண்டுமெனவும், இல்லாவிடில், 9ஆம் திகதி இடம்பெறவுள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் வைத்து, பதவி விலகுமாறு கோரப்படுவார் என ராமனுக்கு, கிரிக்கெட் சபைத் தலைவர் ஷஷாங் மனோகர் அறிவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் சபையின் தவிசாளராகப் பதவி வகிக்கும் கே. ஸ்ரீனிவாசன், தனது பதவியை பொதுக் கூட்டத்தில் வைத்து இழப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அக்கூட்டத்தின் போது, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் ஷஷாங் மனோகர், அப்பதவியை ஏற்பார் எனத் தெரிகிறது.
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026