Shanmugan Murugavel / 2025 ஜூலை 24 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான நான்காவது டெஸ்டில் துடுப்பெடுத்தாடும்போது காலில் பந்து தாக்கிய நிலையில் களத்தை விட்டு இந்தியாவின் விக்கெட் காப்பாளர் றிஷப் பண்ட் வெளியேறியுள்ளார்.
மன்செஸ்டரில் புதன்கிழமை (23) ஆரம்பித்த இப்போட்டியின் முதல் நாளில் 37 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தபோதே பண்ட் காயமடைந்துள்ளார்.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை இங்கிலாந்து வென்றதுடன், இரண்டாவது போட்டியை இந்தியா வென்றதுடன், மூன்றாவது போட்டியை இங்கிலாந்து வென்ற நிலையில் இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்தியா, முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 264 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. களத்தில் ஷர்துல் தாக்கூர் 19 ஓட்டங்களுடனும், இரவீந்திர ஜடேஜா 19 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமலுள்ளனர். முன்னதாக சாய் சுதர்ஷன் 61, யஷஸ்வி ஜைஸ்வால் 58, லோகேஷ் ராகுல் 46 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் 2, கிறிஸ் வோக்ஸ், லியம் டோஸன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இந்திய அணியில் கடந்த போட்டியில் விளையாடிய கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ஆகாஷ் டீப்பை, சுதர்ஷன், ஷர்துல், அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் பிரதியிட்டிருந்தனர். இதில் கம்போஜ் அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்.
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026