2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பரா ஒலிம்பிக் வெற்றியாளர்களுக்கு ரொக்கப் பரிசு

Editorial   / 2021 செப்டெம்பர் 07 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பான் டோக்கியோ நடைபெற்ற 2020 பரா ஒலிம்பிக் வெற்றியாளர்களின் வெகுமதி வழங்குவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

இதற்கான அமைச்சவைப் பத்திரம், இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

 அதன்படி,   வெகுமதி திட்டத்துக்காக  106.625 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

டோக்கியோ 2020 பரா ஒம்பிக் ​போட்டியில் இலங்கை இரண்டு பதக்கங்களை வென்றது. இராணுவ அதிகாரி அதிகாரி   தினேஷ் பிரியந்த ஆண்கள் ஈட்டி எஃப் 46 நிகழ்வில் தங்கப்பதக்கம் வென்றார் மற்றும் ஆண்கள் ஈட்டி எறிதல்-எஃப் 64 நிகழ்வில் சமிதா துலன் கொடிவாக்கு வெண்கலப் பதக்கம் வென்றார்.

  பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்களுக்கு 106.625 மில்லியன் ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.

அதன்பிரகாரம்.

 

தங்கப் பதக்கம் வென்றவர் – 50 மில்லியன் ரூபாய்

வெண்கலப் பதக்கம் வென்றவர் - 20 மில்லியன் ரூபாய்

4 வது - 8 வது இடம் - 2.5 மில்லியன் ரூபாய்

9 வது - 16 வது இடம் – 1 மில்லியன் ரூபாய் (நான்கு)

உலக சாதனை - 10 மில்லியன் ரூபாய்

பயிற்சியாளர்கள் - 19.125 மில்லியன் ரூபாய்

மேலும், இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த இருவருக்கும்  பணப்  பரிசு வழங்கப்படவுள்ளது. ஹேரத்துக்கு 10 மில்லியன் ரூபாய். லனுக்கு ரூ. 1 மில்லியன் ரொக்கப் பரிசு வழங்கவும் அங்கிகாரம் கிடைத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .