Shanmugan Murugavel / 2022 மே 23 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட்டுக்குச் செல்வதைத் தவிர்த்து, பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனுடன் மூன்றாண்டு ஒப்பந்த நீடிப்பொன்றை முன்களவீரரான கிலியான் மப்பே கைச்சாத்திட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தையடுத்து பரிஸ் ஸா ஜெர்மைனின் விளையாட்டும்ப் பணிப்பாளர் லியானார்டோ கழகத்தை விட்டு வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. லியனார்டோவுடன் அவ்வளவாக நல்ல உறவை 23 வயதான மப்பே கொண்டிருக்கவில்லை.
இதேவேளை குறித்த ஒப்பந்தம் தொடர்பில் பரிஸ் ஸா ஜெர்மைனுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக லா லிகா தெரிவித்துள்ளது.
இன்னொரு லீக் 1 கழகமான மொனாக்கோவிலிருந்து கடந்த 2017ஆம் ஆண்டு பரிஸ் ஸா ஜெர்மைனில் இணைந்த மப்பே அவர்களுக்காக 168 கோல்களைப் பெற்றுள்ளார்.
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026