2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பரிஸ் 2024: தருஷி கருணாரத்னவும் வெளியேறினார்

Shanmugan Murugavel   / 2024 ஓகஸ்ட் 03 , பி.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸில் நடைபெற்று வரும் பரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து இலங்கையின் தருஷி கருணாரத்னவும் வெளியேற்றப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை (02) நடைபெற்ற தகுதிகாண் சுற்றுப் போட்டியில் 800 மீற்றரை இரண்டு நிமிடங்கள் ஏழு செக்கன்கள் 76 மில்லி செக்கன்களில் கடந்து அரையிறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெறத் தவறிய கருணாரத்ன, இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்று தகுதிகாண் போட்டியில் இரண்டு நிமிடங்கள் ஆறு செக்கன்கள் 66 மில்லி செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்த அரையிறுதிப் போட்ட்டிகளுக்குத் தகுதி பெறுவதற்கான நேரப் பெறுதியை மீண்டும் பெற்றிருக்காத நிலையிலேயே ஒலிம்பிக்கிலிருந்து விலகினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .