2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பரிஸ் 2024: மூன்றாவது தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றிய பைல்ஸ்

Shanmugan Murugavel   / 2024 ஓகஸ்ட் 04 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸில் நடைபெற்று வரும் பரிஸ் 2024 ஒலிம்பிக்கில் மூன்றாவது தங்கப் பதக்கத்தை ஐக்கிய அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ் வென்றுள்ளார்.

இதுவரையில் மூன்று வகையான போட்டிகளான அணி நிகழ்வு, அனைத்தும் சேர்ந்த நிகழ்வு, வோல்டில் பங்குபற்றி மூன்றிலும் தங்கப் பதக்கங்களை வென்றுள்ள 27 வயதான பைல்ஸ், ஒலிம்பிக்கில் 7 தங்கப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 10 பதக்கங்களை மொத்தமாகப் பெற்றுள்ளார்.

தளப் பயிற்சி, சமநிலை பீம் ஆகிய இன்னும் இரண்டு வகையான போட்டிகளில் பைல்ஸ் இன்று பங்கேற்கவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .