Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2024 ஓகஸ்ட் 01 , பி.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்ஸில் நடைபெற்று வரும் பரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளின் பெண்களுக்கான தனிநபர் மேசைப்பந்தாட்டத்தின் மூன்றாவது சுற்றோடு 61 வயதான லக்ஸம்பேர்க்கின் முன்னாள் சீன வீராங்கனையான நி ஸியாலியன் வெளியேறியுள்ளார்.
புதன்கிழமை (31) நடைபெற்ற சீனாவின் சண் யிங்ஷாவுடனான மூன்றாவது சுற்றுப் போட்டியில் தோற்றே ஒலிம்பிக்கிலிருந்து நி ஸியாலியன் வெளியேறியுள்ளார்.
கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு சண் யிங்ஷா தயாராகுவதற்கு நி ஸியாலியன் உதவியிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.
பரிஸ் ஒலிம்பிக்கில் மேசைப்பந்தாட்டத்தில் கலந்து கொள்ளும் மிகவும் வயதானவர் நி ஸியாலியன் ஆவார்.
சீனாவுக்காக 1983ஆம் ஆண்டு உலக சம்பியனான நி ஸியாலியன் 1980களின் இறுதியில் லக்ஸம்பேர்க்குச் சென்று பின்னர் 1996ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் சீனாவைத் தவிர்த்து வேறு நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த விரும்பாதபோதும் பின்னர் தற்போது ஆறாவது ஒலிம்பிக்கில் லக்ஸம்பேர்க்குக்காக பங்கேற்றுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
35 minute ago
40 minute ago