2025 மே 09, வெள்ளிக்கிழமை

பாலியல் குற்றச்சாட்டு: தனுஷ்க விடுவிப்பு

J.A. George   / 2023 செப்டெம்பர் 28 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க தன் மீதான பாலியல் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியா – சிட்னி நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தனுஷ்க குணதிலக்க பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றமற்றவர் என சிட்னி நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியின் பின்னர், யுவதியை பாலியல் வன்கொடுமை செய்தாக தனுஷ்க குணதிலக்க மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இதனையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6ஆம் திகதி தனுஷ்க குணதிலக்க கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X